sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மண்டல அளவிலான கிராம அறிவியல் திருவிழா பயிற்சி

/

மண்டல அளவிலான கிராம அறிவியல் திருவிழா பயிற்சி

மண்டல அளவிலான கிராம அறிவியல் திருவிழா பயிற்சி

மண்டல அளவிலான கிராம அறிவியல் திருவிழா பயிற்சி


ADDED : டிச 22, 2024 03:20 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களிடையே, அறிவியல் மனப்பான்-மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உண்-டாக்கவும், 'வானவில் மன்றம்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடந்த பயிற்சி முகாமிற்கு, உதவி திட்ட அலு-வலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சேதுராமன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். வானவில் மன்ற நாமக்கல், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, செங்குட்டுவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.முகாமில், எதிர் வரும் அரையாண்டு விடுமுறையில், கிராமங்-களில் சென்று நேரடியாக மக்களை சந்தித்து, அறிவியல் பழகு கிராம அறிவியல் திருவிழாவில், அளவை திருவிழா, அறிவியல் அற்புதங்களை விளக்கும் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான அறி-வியல் விளையாட்டுகள், பாடல்கள், குழந்தைகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பல்-வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும், 2,000 இடங்களிலும், நாமக்கல் மண்ட-லத்தில், 250 இடங்களிலும் நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us