/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மறுவாழ்வு இல்லங்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 'சீல்': கலெக்டர்
/
மறுவாழ்வு இல்லங்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 'சீல்': கலெக்டர்
மறுவாழ்வு இல்லங்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 'சீல்': கலெக்டர்
மறுவாழ்வு இல்லங்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 'சீல்': கலெக்டர்
ADDED : அக் 27, 2024 04:25 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்-லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்-லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். அதன்படி, குழந்தைகளுக்கான இல்லங்கள் https://dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்திலும், முதியோ-ருக்கான இல்லங்கள் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளத்திலும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறு-வாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அனைத்தும் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்-திலும், பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள் https://tnswp.com என்ற இணையதளத்திலும் பதிவு மேற்கொள்ளப்-பட வேண்டும். ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், பதிவு பெறாத இல்லங்களுக்கு 'சீல்' வைக்கப்-படும்.