ADDED : செப் 23, 2024 04:53 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் சிங்காரவேல் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், நகர அ.தி.மு.க., செயலர் பால-சுப்ரமணி ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, கோப்பை, பதக்கம் வழங்கினர். இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை உள்பட பல்வேறு பிரிவுகளில், 7 போட்டிகள் நடந்தன.
குதிரைகளுக்கு தகுந்தாற்போல், 7, 8, 9, 10 மைல் என, போட்டி துாரம் வைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியை காண பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்-பட்ட நபர்களை அழைத்து செல்ல, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்-யப்பட்டிருந்தது. தே.மு.தி.க., நகர செயலர் நாராயணசாமி, முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.