/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறந்த ரிக் டிரைவர் உடலை வைத்துதிருச்செங்கோட்டில் உறவினர்கள் போராட்டம்
/
இறந்த ரிக் டிரைவர் உடலை வைத்துதிருச்செங்கோட்டில் உறவினர்கள் போராட்டம்
இறந்த ரிக் டிரைவர் உடலை வைத்துதிருச்செங்கோட்டில் உறவினர்கள் போராட்டம்
இறந்த ரிக் டிரைவர் உடலை வைத்துதிருச்செங்கோட்டில் உறவினர்கள் போராட்டம்
ADDED : ஏப் 23, 2025 01:48 AM
திருச்செங்கோடு,:திருச்செங்கோடு அடுத்துள்ள வட்டூர் வேலனம்பட்டியை சேர்ந்த ரிக் டிரைவர், ஆந்திர மாநிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து டிரைவர் உடலை, ரிக் உரிமையாளர் வீட்டு முன் வைத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வட்டூர் ஊராட்சி வேலனம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 46. இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு கோகுல், 22, மவுனிஷ், 19, என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த, 17 ஆண்டுகளாக சுபம் போர்வெல் நிறுவனத்தில், ரிக் டிரைவராக செந்தில்குமார் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், ஆழ்துளை கிணறு அமைக்க ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலி வந்தனா பகுதிக்கு சென்றிருந்த நிலையில் செந்தில்குமார் கடந்த, 20ம் தேதி மதியம் திடீரென இறந்தார்.
இது குறித்து ரிக் உரிமையாளர் மணி, செந்தில்குமார் மனைவிக்கு தகவல் கொடுத்து ஆந்திரா அழைத்து சென்று, பிரேத பரிசோதனை முடித்து, உடலை செந்தில்குமாரின் தாய் வீடு உள்ள வட்டூர் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.
செந்தில்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி குடும்பத்தினர், உறவினர்கள் உடல் வந்த ஆம்புலன்ஸ் உடன்,
அத்திமரப்பட்டியில் உள்ள ரிக் உரிமையாளர் மணி வீட்டுக்கு கொண்டு வந்து உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி., சண்முகம், திருச்செங்கோடு டி.எஸ்.பி., சீனிவாசன் ஆகியோர், மணி வீட்டிற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உறவினர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவரின் உடல், ஆந்திர மாநிலத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், அதன் அறிக்கை வந்த பின்னால், ஏதாவது தவறு இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.