/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புயலால் கடலுார் மாவட்டம் பாதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
/
புயலால் கடலுார் மாவட்டம் பாதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புயலால் கடலுார் மாவட்டம் பாதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புயலால் கடலுார் மாவட்டம் பாதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : டிச 05, 2024 07:20 AM
நாமக்கல்: புயலால் பாதித்த கடலுார் மாவட்டத்திற்கு, நாமக்கல்லில் இருந்து, 10.66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண
பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட
மாவட்டங்களில் கன-மழை பெய்ததை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி-புரம், செங்கல்பட்டு, விழுப்புரம்
உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மேலும், கடந்த, 1ல் புயல் கரையை கடந்த-போது, விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, கடலுார் மற்றும் திருவண்ணா-மலை மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை
மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், 10.66 லட்சம் ரூபாய் மதிப்பில்
அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள், பால் பவுடர், சர்க்கரை, ரொட்டி, சோப்பு, தீப்பெட்டி, பக்கெட், மக்
உள்ளிட்ட நிவாரண பொருட்களை, 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்திற்கு லாரிகள் மூலம்
அனுப்பி வைக்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் உமா கொடியசைத்து, வாகனத்தை அனுப்பி வைத்தார். டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரின் நேர்முக
உதவியாளர் முருகன், அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.இதேபோல், நேற்று மாலை, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட
விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, 18.77 லட்சம் ரூபாய் மதிப்பில், நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும், 2 கனரக
வாகனங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர்
நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கனரக வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.