/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்
/
மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்
ADDED : டிச 23, 2024 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ஜேடர்பாளையம் அருகே, வி.புதுப்பாளையம் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள தென்னை மரத்தில், தேனீக்கள் தேன்கூடு கட்டியுள்ளது. அப்பகுதியை கடந்த செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொட்டி துன்புறுத்தி வந்தது.
இது குறித்து, வடகரையாத்துார் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா, தேனீக்களை அகற்றி தருமாறு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை அகற்றினர்.

