/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஏப் 24, 2025 02:02 AM
ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், பரமத்தி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட மறவாபாளையம் பகுதியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, கழிப்பிடம் கட்டியிருந்தனர்.
தற்போது அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளாக மாறிய நிலையில், புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கழிப்பிட கட்டடங்களை அகற்ற, அப்பகுதி பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கழிப்பிடங்களை, பரமத்தி வேலுார் மண்டல துணை தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் தங்கமணி, வி.ஏ.ஓ., ராஜா ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
பரமத்தி எஸ்.ஐ., ராதா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

