/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிவாசகர்களுக்கு ஒதுக்கீடு
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிவாசகர்களுக்கு ஒதுக்கீடு
ADDED : டிச 18, 2024 01:35 AM
நாமக்கல், டிச. 18-
நாமக்கல் கோட்டை சாலையில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. இங்கு தினமும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான வாசகர்கள் புத்தகங்களை படித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாசகர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், மைய நுாலகத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் ஏராளமான கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கடை விரித்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததை அறிந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, ஆக்கிரமிப்பு கடைகளை, நேற்று அகற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் பேரிகார்டு வைத்து, கயிறு கட்டி வாசகர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கினர். மேலும், மீண்டும் கடைகள் வைத்தால் பறிமுதல் செய்யப்படும் என, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.