/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 25, 2025 01:32 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நாமக்கல் உழவர்சந்தை எதிரே, பொய்யேரிக்கரை செல்லும் சாலையில், 12 பேர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்ததால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நாமக்கல்லை சேர்ந்த மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகின.
மனுதாரர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள், நேற்று, 12 கடைகளின் ஆக்கிரமிப்புகளை, போலீஸ் பாதுகாப்புடன், துாய்மைப்பணியாளர்களை கொண்டு அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

