/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் நுாற்பாலை கட்டடம் அகற்றம்
/
ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் நுாற்பாலை கட்டடம் அகற்றம்
ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் நுாற்பாலை கட்டடம் அகற்றம்
ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் நுாற்பாலை கட்டடம் அகற்றம்
ADDED : ஏப் 18, 2025 01:18 AM
பள்ளிப்பாளையம் வெப்படையில், மழைநீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் நுாற்பாலை கட்டடத்தை, வருவாய்த்துறையினர், இடித்து அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையில் சவுதாபுரம் செல்லும் சாலையில் தனியார் நுாற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நுாற்பாலையின் முன் மழைநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் ஒரு பகுதியை, தனியார் நுாற்பாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் மற்றும் கட்டடங்களை கட்டி பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து புகார் வந்ததையடுத்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பின், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அசம்பாவிதத்தை தவிர்க்க, பாதுகாப்பு பணியில் வெப்படை போலீசார் ஈடுபட்டிருந்தனர். மேலும், வெப்படை தீயணைப்பு வீரர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி கூறியதாவது:வெப்படை அருகே, மழைநீர் செல்லும் ஓடையில் ஒரு பகுதியான, 23 சென்ட் நிலத்தை, தனியார் நுாற்பாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து, நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

