/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேதமான வெண்ணந்துார் சாலை சீரமைப்பு
/
சேதமான வெண்ணந்துார் சாலை சீரமைப்பு
ADDED : நவ 13, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி சாலை, வெண்ணந்துார் வழியாக ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஈரோடு, கோவை மற்றும் சுற்றுவட்டார ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், சமீபத்தில் பெய்த மழையில், வெண்ணந்துார் டவுன் பஞ்., சாலையின் மையப்பகுதியில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டதால், இச்சாலைய சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' செய்து, சீரமைக்கும் பணி நடந்தது.