/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் வழங்க சேதமடைந்த குழாய் மாற்றியமைப்பு
/
குடிநீர் வழங்க சேதமடைந்த குழாய் மாற்றியமைப்பு
ADDED : பிப் 14, 2025 07:21 AM
பள்ளிப்பாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், குடிநீர் சீராக வழங்கும் வகையில், சேதமடைந்த குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி நடக்கிறது.
பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு அதிகரித்து வருகிறது. டவுன் பஞ்., பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீர் வீணாகி செல்கிறது.
இதனால் தண்ணீர் முழுமையாக செல்லாததால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க, சேதமடைந்துள்ள குழாய் மாற்றப்பட்டு, புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆலாம்பாளையம் டவுன் பஞ்., குடிநீர் பணியாளர்கள் கூறியதாவது: ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய் சேமதடைந்துள்ளதால், குடிநீர் வீணாகி செல்கிறது. தற்போது பற்றாக்குறை இல்லாமல் சீராக குடிநீர் வழங்கும் வகையில், சேதமடைந்த குடிநீர் குழாயை மாற்றியமைத்து, புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.

