/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளியம்மன் கோவில் திருவிழா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
/
காளியம்மன் கோவில் திருவிழா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
காளியம்மன் கோவில் திருவிழா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
காளியம்மன் கோவில் திருவிழா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
ADDED : ஜன 21, 2025 06:36 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. விழாக்குழு தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்-கேற்றார். அவர் பேசியதாவது:
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு திருவிழாவில் சக்தி அழைப்பு, மகா குண்டம் பூ மிதித்தல், தேர்த்திருவிழா,
வாணவே-டிக்கை, அம்மன் திருக்கல்யாணம், அம்மன் திருவீதி உலா உள்-ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்திட நடவ-டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரின் ஒத்து-ழைப்பும் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பிப்., 18ல் பூச்சாட்டுதல், 25ல் மறு பூச்சாட்டு, 26ல் கொடியேற்றம், மார்ச், 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், 6ல் அம்மன்
திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, 8ல் மஞ்சள் நீராட்டு, 9ல் ஊஞ்சல் விழா ஆகிய வைபவங்கள் நடத்துவது என தீர்மானிக்-கப்பட்டது.
நகராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், கோவில் பூசாரிகள் சண்முகம், சதாசிவம், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

