/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கை
/
டிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கை
ADDED : ஏப் 06, 2024 02:23 AM
குமாரபாளையம்:குமாரபாளையம்
போலீஸ் ஸ்டேஷன் அருகே, பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில்,
திங்கள், வெள்ளி, கிருத்திகை, சஷ்டி, பங்குனி மாதம், தைப்பூசம்,
கார்த்திகை, மார்கழியில் விரதமிருந்து அறுபடை கோவில் யாத்திரை
செல்லும் காலம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு
நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பெருமளவில் திரண்டு சுவாமி
தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலின் எதிரே, 'டிரான்ஸ்பார்மர்'
உள்ளதால், யாகசாலை பூஜைகள், திருவிளக்கு வழிபாடு, அன்னதானம்
உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த சிரமம் ஏற்படுவதுடன், பொதுமக்கள்
அச்சத்துடன் நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
மேலும்,
இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீப்பொறி பறந்து விழுகிறது. நேற்று
காலையில் கூட தீப்பொறி உருவாகி, பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
எனவே, இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பக்தர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

