/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் குங்கும பூ பயிரிட மண் பரிசோதனை செய்ய கோரிக்கை
/
கொல்லிமலையில் குங்கும பூ பயிரிட மண் பரிசோதனை செய்ய கோரிக்கை
கொல்லிமலையில் குங்கும பூ பயிரிட மண் பரிசோதனை செய்ய கோரிக்கை
கொல்லிமலையில் குங்கும பூ பயிரிட மண் பரிசோதனை செய்ய கோரிக்கை
ADDED : டிச 09, 2024 07:11 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் விளையும் பொருட்களை மதிப்பு கூட்டி, மலைவாழ் மக்களை பொருளாதாரத்தில் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. டில்லி வேளாண்மை மதிப்பு கூட்டு பொருள் பிரிவை சேர்ந்த விஞ்ஞானி மோனிமாடசாமி தலைமை வகித்தார். காபி வாரிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பஞ்., தலைவர் நாகலிங்கம், முன்னோடி விவசாயி சின்னுசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மிளகு விவசாயிகள் பேசியதாவது: மலைப்பகுதியில் பணப் பயிரான மிளகு, காபி செடிகளில் கடந்த சில மாதங்களாக வாடல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் பலா பழங்கள் அதிகளவில் பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது. எனவே, கேரளாவில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில், பலா பழத்தில் இருந்து ஜாம், பிஸ்கட் போன்றவை தயாரிப்பது போல, கொல்லிமலையிலும் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு விளையும் வாழைப்பழங்களில் நமரன் பழங்கள் அதிக சுவை உள்ளதாக உள்ளது. அதனை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் அதிக வருமானம் தரக்கூடிய குங்கும பூக்கள் பயிரிட மண் பரிசோதனை செய்து, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, வேளாண்மை மதிப்பு கூட்டு பொருட்கள் பிரிவு விஞ்ஞானி மோனி மாடசாமி பேசுகையில், ''கொல்லிமலையில் காபி, மிளகு உற்பத்தி அதிக பங்கு வகிக்கிறது. இதனால், காபி, மிளகு ஆகியவைகளை சந்தைப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாரியத்தில் புதிய சங்கங்களை உருவாக்கி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.