/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோடாபுலி வாய்க்கால் துார்வார கோரிக்கை
/
மோடாபுலி வாய்க்கால் துார்வார கோரிக்கை
ADDED : டிச 12, 2024 01:30 AM
மோடாபுலி வாய்க்கால் துார்வார கோரிக்கை
எருமப்பட்டி, டிச. 12-
எருமப்பட்டி அருகே, கொல்லிமலை வனத்தில் அதிகளவில் மழை பெய்யும்போது வெள்ளமாக மாறி அடிவாரத்தில் இறங்குகிறது. பின் அடிவார பகுதியான சிங்களகோம்பையில் இருந்து, மோடாபுலி வாய்க்கால் வழியாக சென்று, எருமப்பட்டி, தேவராயபுரம் ஏரியில் கலக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் சிங்களகோம்பையில் இருந்து வந்த தண்ணீர், இந்த மோடாபுலி வாய்க்கால் வழியாக சென்றது. பின், நாளடைவில் இந்த வாய்க்கால் முற்றிலும் மூடப்பட்டதால், தற்போது கழிவுநீர் செல்லும் வாய்க்காலாக மாறியுள்ளது. கடந்த வாரம் கனமழை பெய்தபோதும், இந்த வாய்க்காலில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால், இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து பயன்படாமல் உள்ளன. எனவே, கொல்லிமலையில் இருந்து வரும் பழமை வாய்ந்த வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

