/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை ஆம்புலன்சில் அழைத்து வர கோரிக்கை
/
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை ஆம்புலன்சில் அழைத்து வர கோரிக்கை
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை ஆம்புலன்சில் அழைத்து வர கோரிக்கை
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை ஆம்புலன்சில் அழைத்து வர கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2025 12:47 AM
எருமப்பட்டி,கிராம பகுதிகளில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளை, 108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து வர கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பவித்திரம்புதுார், அப்பாயிபாளையம், முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாரந்தோறும் செவ்வாய்கிழமை, கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு, அரசு, தனியார் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதனால், மிகுந்த சோர்வடைகின்றனர்.
மேலும், பஸ்சுக்கு காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, பஸ் ஸ்டாப்பில் அமர இருக்கைகள் கூட இல்லாத நிலை உள்ளது. அங்கு தள்ளுவண்டி கடை வைத்திப்பவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களை உட்கார கூட விடாமல் விரட்டி அடிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்காக இருக்கைகள் அமைக்க வேண்டும். கிராம பகுதியில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை கணக்கெடுத்து, அரசு அவசரகால ஆம்புலன்ஸ்களில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.