/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழைநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
/
மழைநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, மல்லியகரையில் இருந்து திருச்செங்கோடு வரை சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமகிரிப்பேட்டை வரை சாலை அமைக்கும் பணி முடிந்து விட்டது. நாமகிரிப்பேட்டை யூனியன், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும் மழைநீர் செல்ல வசதியாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, கால்வாயில் பல இடங்களில் செடிகள் வளர்ந்தும், மண் சரிந்தும் காணப்படுகிறது. இதனால், மழைநீர் செல்ல முடியாமல், அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்துவிடுவதால், வேளாண் பணி பாதிக்கிறது. எனவே, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை, மழைநீர் செல்லும் கால்வாயை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.