ADDED : செப் 22, 2026 04:18 AM
நாமக்கல்; காந்தியவாதி ரமேஷ், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், புதுச்சததிரம் ஒன்றியம், செல்லப்பம்-பட்டி பஞ்., மிகப்பெரிய எல்லையும், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட பஞ்., ஆக உள்ளது. கன்னியாகுமரி - வாரணாசி தேசிய நெடுஞ்சாலை இந்த பஞ்., கடந்து செல்கிறது. பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் முதல் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கு பகுதியில் உள்ளன. இதனால், கிழக்கு பகுதியில் உள்ள கிராம மக்கள் அன்றாட தேவைகள், சேவைகளை பெற தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மேற்கு பாலப்பட்டியை தலைமையிட-மாக கொண்டு, 'மேற்கு பாலப்பட்டி பஞ்.,' என்ற பெயரில் புதிய கிராம பஞ்., அமைத்து தர வேண்டும். வரும், அக்., 2ல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிழக்கு பாலப்பட்டியில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், கலெக்டர் பங்கேற்று புதிய பஞ்., உருவாக்குவது தொடர்பாக சட்டப்-பூர்வ வழிமுறைகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.
