/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்திரப்பதிவு ஆபீசில் குவிந்து கிடக்கும் 'ரப்பர் ஸ்டாம்பு'களை அப்புறப்படுத்த கோரிக்கை

ADDED : அக் 01, 2024 01:33 AM
பத்திரப்பதிவு ஆபீசில் குவிந்து கிடக்கும் 'ரப்பர் ஸ்டாம்பு'களை அப்புறப்படுத்த கோரிக்கை
ராசிபுரம், அக். 1-
இடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்து கிடக்கும், 'ரப்பர் ஸ்டாம்பு'களை, சமூகவிரோதிகள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தும் முன், அவற்றை அப்பறப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராசிபுரம் நகராட்சியில், கடந்த, 1885ல் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம், செங்கல், சுண்ணாம்பு ஆகிய கலவையால் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன், 62 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 140 ஆண்டு பழமையான இந்த சார்பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் சில இடங்களில் கூரையில் மழைநீர் கசிய தொடங்கியது. இதையடுத்து, பழைய கட்டடத்தை இடித்து விட்டு, 1.35 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, கடந்த வாரம் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று இடிக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு மூலையில், பழைய ரப்பர் ஸ்டாம்புகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுள்ளனர். ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பக்கம் எண் கொண்ட ரப்பர் ஸ்டாம்புகள், சார்பதிவாளர் முத்திரை, வட்ட வடிவிலான ரப்பர் ஸ்டாம்புகள் அதிகளவு உள்ளன. பயன்பாட்டில் இல்லாத இந்த ரப்பர் ஸ்டாம்புகளை முறையாக அழிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.
சமூக விரோதிகள் கையில் சிக்கினால், பழைய ஆவணங்களை எளிதாக தயார் செய்ய முடியும். எனவே, கவனக்குறைவாக இல்லாமல் பழைய ரப்பர் ஸ்டாம்புகளை அழிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.