ADDED : மே 26, 2026 04:24 AM
ராசிபுரம்:கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர் அடிவார பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து அருகில் உள்ள ஓடை அல்லது ஏரிகளில் கலப்பது வழக்கம். கொல்லிமலையை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் மலையிலிருந்து வரும் மழைநீர் செல்ல ஓடைகள் மற்றும் கால்வாய்கள் உள்ளன. மலைப்பாதை
யின் தொடக்கமான காரவள்ளி பகுதியில் ஒரு பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாகத்தான் கொல்லிமலையிலிருந்து வரும் உபரிநீர் மற்றும் மழைநீர் வந்து சேந்தமங்கலம் ஏரி வரை செல்கிறது.
காரவள்ளி பகுதியில் உள்ள இந்த ஓடையை ஒட்டி மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை அதிக அளவில் குவித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டப்படுவதால் இந்த ஓடை தற்போது துார்ந்து போய் உள்ளது. மேலும் குப்பைகளை தாண்டி மழைநீர் எளிதாக செல்ல முடியாத வகையில் ஓடையின் நடுவே முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடை துார்வாரப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயமும் செழிக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
