/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில் தண்டவாளத்துக்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
ரயில் தண்டவாளத்துக்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 24, 2025 12:41 AM
வெண்ணந்துார், அத்தனுார் டவுன் பஞ்., ஆயிபாளையம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்துக்கு அடியில், தடுப்புகள் அமைக்காததால், தண்டவாள பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்., ஆயிபாளையம் பகுதியில், சேலம்--நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. பாலத்திற்கு அடியில் ரயில் தண்டவாளங்களை கடக்க தடுப்பு கட்டைகள் அமைக்காமல் உள்ளது.
இப்பகுதியில் ஸ்பின்னிங் மில், உர தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை ஊழியர்கள் சென்று வருகின்றனர்.இதனால், ரயில்வே தண்டவாளர்களை கடக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, அத்தனுார் டவுன் பஞ்., ஆயிபாளையம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில், தடுப்புகளை அமைக்க, ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.