/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பரம்பரை ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை
/
பரம்பரை ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2025 02:01 AM
நாமக்கல், 'பரம்பரை ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய பரம்பரை ஜோதிடர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ருத்ர மணிகண்டன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க உறுப்பினர்ளுக்கு காப்பீடு வழங்குவது,
சங்க கட்டடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து, தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட பரம்பரை ஜோதிடர்கள் உள்ளனர். ஜோதிடர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள், ஜோதிடர் நலவாரியம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஜோதிடர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பரம்பரை ஜோதிடர்கள் கலந்து கொண்டனர்.