/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துரு பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்ட கோரிக்கை
/
துரு பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்ட கோரிக்கை
துரு பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்ட கோரிக்கை
துரு பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்ட கோரிக்கை
ADDED : மே 15, 2025 01:54 AM
நாமக்கல், 'தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் துரு பீடித்து வீணாகி வருகின்றன. அவற்றை பொது ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு, விபத்தில் சிக்கும் வாகனங்கள், திருட்டு வாகனம், கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களான, பைக், மொபட், கார், ஜீப் என, இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதற்குரிய நெம்பர் வாங்கியபின், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கின்றனர்.
அவ்வாறு பறிமுதல் செய்த, விபத்தில் சிக்கிய வாகனங்களை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, தங்களது வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெறாத வாகனங்கள், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், ஏராளமான மொபட், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவை, வெயில், மழையில் வீணாகி துரு பீடித்து வருகின்றன. இதை பார்க்கும் சமூக ஆர்வலர்கள், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றை முறையாக ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தினால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.