/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை
/
பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை
ADDED : மே 05, 2024 02:31 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
டவுன் பஞ்., ஒட்டி பசிறு மலை அமைந்துள்ளது. புதுப்பட்டி டவுன்
பஞ்சாயத்து, மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி ஆகியவைகளில் எல்லையில்
இந்த மலை அமைந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த மலை பெரும்
உதவியாக இருக்கிறது. மழை காலங்களில் பசிறு மலையை சுற்றியுள்ள
பகுதியில் தான் அதிக மழை பொழிகிறது. அதேபோல், மலையை சுற்றியுள்ள
விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க இந்த மலையும்
ஒரு காரணம்.
இந்த மலையில் மரங்கள் தற்போது குறைந்து வருகிறது.
இதனால், இப்பகுதி இளைஞர்கள் பசிறு மலையை மையமாக வைத்து, கடந்த சில
ஆண்டுகளாக விதை பந்து வீசினர். அதுமட்டுமின்றி மரக்கன்றுகளையும்
நட்டு வைத்தனர். இதனால், மரங்களும், செடிகளும் அதிகளவு
வளர்ந்திருந்தன. ஆனால், கடந்தாண்டு கோடை காலத்திற்கு முன் பசிறு
மலையில் காட்டு தீ பரவியது.
இதில், 80 சதவீதம் மரங்கள் முற்றிலும்
எரிந்து சாம்பலாகின. அதன்பின், பசிறுமலையில் மிக குறைந்தளவே
மரங்கள் உள்ளன. எனவே வனத்துறையினர் மரங்களை நட ஏற்பாடு செய்ய
வேண்டும் என, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.