sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

/

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை


ADDED : நவ 03, 2024 02:25 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தையொட்டி, பசிறு மலை அமைந்துள்ளது. புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, மூலப்பள்ளிப்-பட்டி ஊராட்சி ஆகியவைகளின் எல்லையில், இந்த மலை அமைந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த மலை பெரும் உதவியாக இருக்கிறது. மழைக்காலங்களில் பசிறு மலையை சுற்றியுள்ள பகுதியில் தான் அதிக மழை பொழிகிறது. அதேபோல், மலையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்-தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க இந்த மலையும் ஒரு காரணம்.

இந்த மலையில் மரங்கள் தற்போது குறைந்து வருகிறது. இதனால், இப்பகுதி இளைஞர்கள் பசிறுமலையை மையமாக வைத்து, கடந்த சில ஆண்டுகளான விதை பந்து வீசினர். அது-மட்டுமின்றி மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இதனால், மரங்களும், செடிகளும் அதிகளவு வளர்ந்திருந்தன. ஆனால், கடந்தாண்டு கோடை காலத்திற்கு முன் பசிறு மலையில் பெரும்-பகுதி காட்டு தீ பரவியது. இதில், 80 சதவீதம் மரங்கள் முற்-றிலும் எரிந்து சாம்பலாகின. அதன் பிறகு பசிறுமலையில் மிக குறைந்த அளவே மரங்கள் உள்ளன. எனவே, வனத்துறையினர் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us