ADDED : நவ 25, 2024 03:17 AM
எருமப்பட்டி: ஐப்பசி மாத பட்டமாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியனில், நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதியில் பெய்த கன மழையால், ஐப்பசி மாத பட்டமாக கர்நாடகா பொன்னி, சூப்பர் பொன்னி ரக நெற்-பயிர்கள் பயிரிட்டுள்ளனர். நெல் வயல்களில் அதிகளவில் களைகள் முளைத்திருந்ததால், கூலி ஆட்கள் வைத்து அவற்றை அகற்றும் பணி நடந்தது. தற்போது நெற்பயிருக்கு ஊட்டச்சத்து தரும் வகையில், உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்-ளனர்.இதுகுறித்து, கோம்பை பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் கூறு-கையில், ''இப்பகுதியில், 200 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்-யப்பட்டுள்ளது. நெற்பயிரில் முளைத்திருந்த களைகளை அகற்றி, உரமிடும் பணி நடக்கிறது. தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.