/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
/
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நாமக்கல்: தமிழக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்கம் சார்பில், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை விளக்க கருத்தரங்கு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுதா தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜெயவேல் துவக்க உரையாற்றினார். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் சங்க கவுரவ தலைவருமான சாந்தி கூறியதாவது: தமிழகம் முழுவதும், 36,000க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியம் என்பது மிக மிக குறைவாக உள்ளது. மாத ஊதியமாகவும், தொகுப்பூதியமாகவும் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப்., போன்ற பயன்களும் வழங்க வேண்டும். அதுவும் காலதாமதமாகவும் வழங்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
வரும், 27ல், ஈரோட்டில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. வரும், 20ல், தர்மபுரியில், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

