தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சிதிலமடைந்த சமுதாய கூடம்புனரமைப்பு செய்ய கோரிக்கை

சிதிலமடைந்த சமுதாய கூடம்புனரமைப்பு செய்ய கோரிக்கை

சிதிலமடைந்த சமுதாய கூடம்புனரமைப்பு செய்ய கோரிக்கை


ADDED : மே 14, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:சிதிலமடைந்துள்ள சமுதாய கூடத்தை புனரமைப்பு செய்ய கோரிக்கை

எழுந்துள்ளது.மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் கிராமத்தில், கடந்த, 1997ல், ஜவகர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதில், ராமாபுரம் பகுதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், தங்களது இல்ல விசேஷங்களான திருமணம், காதுகுத்து, கிடா வெட்டு உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களை செய்து வந்தனர்.

கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த கட்டப்பட்ட இந்த கட்டடம், போதிய பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே விரிசலடைந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியை சேர்ந்த மக்கள் வேறு வழியின்றி திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வையப்பமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் அதிக பணம் செலுத்தி தங்களது இல்ல விசேஷங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். சிதிலமடைந்து காணப்படும் சமுதாய நலக்கூடத்தை புனரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us