/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உழவன்' செயலியில் அனைத்து பயிர்களையும் பதிய கோரிக்கை
/
'உழவன்' செயலியில் அனைத்து பயிர்களையும் பதிய கோரிக்கை
'உழவன்' செயலியில் அனைத்து பயிர்களையும் பதிய கோரிக்கை
'உழவன்' செயலியில் அனைத்து பயிர்களையும் பதிய கோரிக்கை
ADDED : ஆக 30, 2025 01:27 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதன் விவரம் வருமாறு:
பூபதி, விவசாயி: அணியார் கிராமத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் குட்டையாக உள்ளது. இதில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களை அகற்ற வலியுறுத்தி, 365 நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கலெக்டர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
துரைசாமி, விவசாயி: நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவில் உள்ளது. ஆனால், போதுமான விலை கிடைப்பது இல்லை. எனவே, மரவள்ளிக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இதுகுறித்து முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இங்கும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம் விலை, கடந்தாண்டை ஒப்பிடும்போது மூட்டைக்கு, 500 ரூபாய் அதிகரித்து விட்டது. தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சந்திரசேகர்: உழவன் செயலியில் அனைத்து பயிர்களையும் பதிவு செய்து, விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எவ்வளவு ஏக்கர் மரவள்ளி பயிர் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு அறுவடை செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற விபரம் தெரியும்.
கலெக்டர்: அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

