/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடிப்பெருக்கில் ஆற்றில் நீராட வசதியாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

ADDED : ஜூலை 25, 2024 01:27 AM
பள்ளிப்பாளையம்: ஆடிப்பெருக்கில் புனித நீராட வசதியாக, பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி, ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதனால், ஆற்றில் குளிக்கவும், துணிமணிகளை துவைக்கவும் வழியின்றி, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதேபோல், மீனவர்களும் பரிசலில் சென்று மீன் பிடிக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் ஆடி, 18 அன்று ஆடிப்பெ-ருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அப்போது, உள்ளூர், வெளி-யூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராட வருவர். ஆனால், ஆற்றில் ஆகாயத்தாரை படர்ந்துள்ளதால், புனித நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீராடும் போது காலில் ஆகாயத்தாமரை வேர்கள் மாட்டி அசம்பா-விதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.