ADDED : செப் 01, 2026 05:39 AM
நாமக்கல்; ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஆதிதிரா-விடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா-வது:
ராசிபுரம் தாலுகா, முத்துக்காளிப்பட்டி ஆதிதிரா-விடர் தெருவில், 350 குடும்பங்களை சேர்ந்த, 650க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்நிலையில், தனி நபர் ஒருவர் வீட்-டிற்கும், மாரியம்மன் கோவிலுக்கும் இடையே, 110 மீட்டர் நீளத்தில் தீண்டாமை சுவர் கட்டி உள்ளார். இவற்றை அகற்றக்கோரி, 2021 ஆக., 14ல் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை அகற்றப்படவில்லை.இதனால், இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், தீண்டாமை சுவரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பகுதியில், ஆதி திராவிட மக்களின் நலனுக்காக சமுதாய நலக்கூடம், மாணவ, மாணவியர் படிக்க நுாலகம் கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.
