ADDED : நவ 03, 2024 02:27 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வேலம்பாளையம் அடுத்து சிங்க-ளாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கிருந்து நாமகிரிப்-பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு வர ஊராட்சி சாலை உள்ளது. இவ்வழியாக கல்லுாரி, பள்ளி வாகனங்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். சிங்களாந்தபுரம் ஊராட்சி முடியும் இடத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டில் எழுதப்பட்டிருந்த பகுதிகள் உடைந்து விழுந்துவிட்டன. அருகில் உள்ள போர்டு துாண்கள் மட்டுமே உள்ளன. அந்த துாண்களும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்வழியாக பள்ளி மாணவர்கள், நடந்து செல்-பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் அதிகளவு செல்கின்றனர். மாண-வர்கள், துாணை பிடித்து செல்லும்போது, அவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே, ஊர் பெயர் பலகையை சீரமைத்து புதிதாக வைக்க வேண்டும் அல்லது முழுமையாக அப்புறப்ப-டுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.