ADDED : மே 24, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்: நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, துாய்மை பணியாளர்களிடம், காய்கறி தோல், பழத்தோல், உணவுக்கழிவு உள்ளிட்ட மட்கும் கழிவுகளை பச்சை வண்ண கூடையில் சேர்க்க வேண்டும்.
காகிதம், புத்தகங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை, நீல வண்ண கூடைகளில் சேர்க்க வேண்டும். சிப்ஸ் கவர், அழுக்கு படிந்த பிளாஸ்டிக் பொருட்கள், நாப்கின், டைபர் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிவப்பு வண்ண கூடையில் சேர்க்க வேண்டும்.
பேட்டரி, காலாவதியான மருந்துகள், போன்ற சிறப்பு கவனிப்பு பொருட்களை கருப்பு வண்ண கூடையில் சேர்க்க வேண்டும் என, மல்லசமுத்திரம் டவுன் பஞ்., இ.ஓ., மூவேந்தர பாண்டியன் தெரிவித்தார்.
