/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிழற்கூடத்தில் இருக்கை அமைக்க வேண்டுகோள்
/
நிழற்கூடத்தில் இருக்கை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 05, 2025 01:39 AM
ப.வேலுார், பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட வெள்ளாளபாளையம், மறவாபாளையம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேம்பால பணிக்காக அப்பகுதியில் இருந்த நான்கு நிழற்கூடங்கள் அகற்றப்பட்டன. இதனால் போக்கு வரத்து வசதிக்காக, இதன் அருகில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வழக்கமான இடத்தின் அருகிலேயே நான்கு நிழற்கூடம் அமைக்கப்பட்டது. நிழற்கூடங்கள் அமைத்து சில நாட்களாகியும், பொதுமக்கள் அமர இருக்கைகள் இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நீண்ட நேரமாக நிற்கும் சூழ்நிலை உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட நிழற்கூடத்தில் இருக்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்
பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

