sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் - வாங்கல் சாலையில் அடிக்கடி விபத்து பேரிகார்டு அமைத்து தடுக்க கோரிக்கை

/

மோகனுார் - வாங்கல் சாலையில் அடிக்கடி விபத்து பேரிகார்டு அமைத்து தடுக்க கோரிக்கை

மோகனுார் - வாங்கல் சாலையில் அடிக்கடி விபத்து பேரிகார்டு அமைத்து தடுக்க கோரிக்கை

மோகனுார் - வாங்கல் சாலையில் அடிக்கடி விபத்து பேரிகார்டு அமைத்து தடுக்க கோரிக்கை


ADDED : அக் 14, 2024 06:18 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுாருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றில், 43.50 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட தரை-வழிப்பாலம் கட்டப்பட்டு, 2014 பிப்., மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பாலம் வழியாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் - ப.வேலுார் வழியாக கரூர் செல்வைதை காட்டிலும், நாமக்கல் - மோகனுார் வழியாக கரூர் சென்றால், 18 கி.மீ., துாரம் குறைவு.

நேரம் மிச்சமாவதுடன், எரிபொருளும் சேமிக்கப்படும். அதனால், மோகனுார் - வாங்கல் காவிரி ஆற்றின் பாலம் வழி-யாக டூவீலர், கார், பஸ், லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாக-னங்கள் பயணிக்கின்றன. கரூர் மாவட்டம், வாங்கல் வழியாக மோகனுார் வரும் வாகனங்கள், அசுர வேகத்தில் வந்து வளைவில் திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அதனால், மோகனுார் - வாங்கல் பிரிவு சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இந்த விபத்து மூலம் உயிர்பலியும், உடல் உறுப்புகள் இழப்பும் ஏற்பட்டு, பலரும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் வேகத்தடை இருந்தும், விபத்துகள் நடக்கிறது குறிப்பிடத்தக்கது. அதனால், 'பொது மக்களை பாதுகாக்கவும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், மோகனுார் - வாங்கல் சாலையில், பேரி-கார்டு அமைக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us