/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்பை அகற்றிய பின் சாலைப்பணி துவங்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றிய பின் சாலைப்பணி துவங்க கோரிக்கை
ஆக்கிரமிப்பை அகற்றிய பின் சாலைப்பணி துவங்க கோரிக்கை
ஆக்கிரமிப்பை அகற்றிய பின் சாலைப்பணி துவங்க கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2025 01:48 AM
நாமக்கல்:முதலைப்பட்டிபுதுாரை சேர்ந்த மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டிபுதுார், 2-வது வார்டில், நபார்டு மற்றும் கிராம சாலைகள் நாமக்கல் அலகு மூலம், சாலை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தார்ச்சாலை அமைக்கும் முன், தாசில்தார், சர்வேயர் மூலம் அளந்து,
எல்லை கற்கள் நடப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும். அதேபோல், சாலை அருகே உள்ள, 4 மின் கம்பங்களையும் அகற்றி மறு சீரமைப்பு செய்து, சாலையை விரிவுபடுத்த வேண்டும். மேலும், பாதாள சாக்கடை, கழிவுநீர் குழாய் பதித்த பின், புதிய சாலை அமைத்து, பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.