/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கத்தார் நாட்டின் கொள்கையால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு நாமக்கல் 'முட்டை'க்காக மத்திய அரசு தலையிட வேண்டுகோள்
/
கத்தார் நாட்டின் கொள்கையால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு நாமக்கல் 'முட்டை'க்காக மத்திய அரசு தலையிட வேண்டுகோள்
கத்தார் நாட்டின் கொள்கையால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு நாமக்கல் 'முட்டை'க்காக மத்திய அரசு தலையிட வேண்டுகோள்
கத்தார் நாட்டின் கொள்கையால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு நாமக்கல் 'முட்டை'க்காக மத்திய அரசு தலையிட வேண்டுகோள்
ADDED : நவ 10, 2024 02:48 AM
நாமக்கல்: 'முட்டை இறக்குமதியில், கத்தார் நாட்டின் புதிய கொள்கையால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்ப-டுத்தும். அதனால், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் முட்டை ஏற்றுமதியா-ளரும், கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்க பொதுச்செயலாளருமான செந்தில் வேண்டுகோள் விடுத்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கத்தார் நாடு, முட்டை இறக்குமதி கொள்கையில் புதிய கொள்-கையை கொண்டுவந்துள்ளது. அதன்படி, 'ஏஏ' மற்றும் 'ஏ' என வகைப்படுத்தப்பட்ட முட்டைகள் மட்டுமே இறக்குமதிக்கு அனு-மதிக்கப்படும். அதாவது, 70 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள, 'ஏஏ' முட்டைகள் என்றும், 60 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ளவை, 'ஏ' முட்டைகள் என்றும், 50 கிராம் எடையுள்ள முட்டைகள், 'பி' வகையிலும், 50 கிராமுக்கு கீழ் உள்ளவை, 'சி' வகையிலும் அடங்கும். அந்த வகையில், 'ஏஏ' மற்றும் 'ஏ' முட்டைகள் மட்டுமே கத்தார் நாட்டில் இனி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, முட்டை இறக்கும-தியில் கத்தார் நாட்டிற்கு நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் பெரும்பாலானவை, 'பி' வகை முட்டைகள். நாமக்கல் மட்டுமல்-லாது, இந்திய முட்டைகள் பொதுவாகவே, 50 முதல், 60 கிராம் வரை எடையுள்ளதாகவே இருக்கும். காரணம், நமது நாட்டின் கோழி இனத்தின் தன்மை அப்படி.
இந்நிலையில், கத்தார் நாட்டின் இந்த புதிய முட்டை இறக்குமதி கொள்கையானது, நம் இரு நாடுகளிடையே இருக்கும் நீண்டகால வர்த்தக உறவை சீர்குலைப்பதுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்துகி-றது.
இந்திய முட்டை ஏற்றுமதி துறை மற்றும் நம் பொருளாதாரம் இரண்டையும் எதிர்மறையாக பாதிக்கும். தற்போதுள்ள, 'ஏஏ' மற்றும் 'ஏ' முட்டை வகைகளுடன், நம் நாட்டின், 'பி' வகை முட்டைகளையும் இறக்குமதி கொள்கையில் சேர்ப்பதை மறுபரிசீ-லனை செய்ய கத்தார் அதிகாரிகளுடன், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.