ADDED : அக் 04, 2026 06:02 AM
பள்ளிப்பாளையம்:ஈகாட்டூர் பகுதியில் செயல்படாத போர்வெல்லை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பள்ளிப்பாளையம்
ஊராட்சி ஒன்றியம், எலந்தகுட்டை பஞ்.,க்கு உட்பட்ட ஈகாட்டூர்
பகுதியில் ஏராளமான குடியிருப்பு உள்ளது. இப்பகுதி மக்களின்
மக்களின் குடிநீர் தேவைக்கு, நிலத்தடி நீர் பயன்படுத்தும் வகையில்
போர்வெல் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக
போர்வெல் பயன்படாமல் காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால்
அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர்வெல்லை
சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி
மக்கள் பல முறை எலந்தகுட்டை பஞ்., நிர்வாகத்தில் கோரிக்கை வைத்தும்
நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
எனவே,
போர்க்கால அடிப்படையில் போர்வெலை சீரமைத்து பயன்பாட்டிற்கு
கொண்டு வந்து, சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
