/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
/
6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 07, 2024 07:28 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அடுத்தடுத்து, ஆறு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல், 45. இவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸில், டீக்கடை, லாரி புக்கிங் ஆபீஸ், மளிகை கடை உள்ளிட்ட ஆறு கடைகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த, 10 இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர். மறுநாள் காலை, டீக்கடை உரிமையாளர் செல்லமுத்து, கடையை திறக்க வந்துள்ளர். அப்போது, ஆறு கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஒரு கடையில், 2,000 ரூபாய் பணம், கால் பவுன் தங்க நகை, டீக்கடையில், 24,000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிந்தது.தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தியிருந்த, 'சிசிடிவி' கேமராவில் ஆய்வு செய்தனர். அதில், கடந்த, 28ல் ஆண்டகலுார் கேட் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில், சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த வேலாயுதம் மகன் கிரிதரன், 21, என்பதும், அணைப்பாளையம் கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரிந்தது. இதையடுத்து கிரிதரனை போலீசார் கைது செய்தனர். மேலும், கிரிதரன் கொடுத்த தகவல்படி, அவருக்கு உதவிய சேலம் மாவட்டம் சோளம்பள்ளத்தை சேர்ந்த அம்மாசி மகன் செல்வகணபதி, 23, சுரேஷ்குமார் மகன் சதீஸ்குமார், 19, ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.