/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரும்பு கம்பி திருடிய 4 பேருக்கு 'காப்பு'
/
இரும்பு கம்பி திருடிய 4 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 03, 2025 01:47 AM
ப.வேலுார், வேலகவுண்டம்பட்டி, சுவாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ், 46; அதே பகுதியில் இரும்பு மற்றும் சிமென்ட் கடை வைத்துள்ளார். கடந்த, 29ல் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் பார்த்தபோது கடையின் பின்புறம் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கடையின் பின்புற கதவை உடைத்து, மூன்று டன் எடையுள்ள, 60 கட்டு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாயாகும். இந்நிலையில், நேற்று வேலகவுண்டம்பட்டி, நாமக்கல் சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த, நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம், அரசம்பட்டி பூசன் துறையை சேர்ந்த முருகேசன், 56, டிரைவர் அதே பகுதி சேர்ந்த சரவணன், 32, நல்லதம்பி, 32, ராஜா, 42 என்பதும், இரும்பு கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, வேலகவுண்டம்பட்டி போலீசார், நான்கு பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மூன்று டன் கம்பியை
பறிமுதல் செய்தனர்.