/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

ADDED : ஜூலை 20, 2025 07:48 AM
நாமக்கல்: பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, 10.91 லட்சம் ரூபாய், மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, ஆறு லட்சத்து, 63,507 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, நான்கு லட்சத்து, 27,764 ரூபாய் என, மொத்தம், 10.91 லச்சம் ரூபாய்க்கான காசோலையை கூட்டுறவாளர்கள் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில், வானக்காரன்புதுார், என்.வெள்ளாளப்பட்டி, எம்.புதுக்கோம்பை, பழையபாளையம், கெஜக்கோம்பை, புதுக்கோம்பை, போடிநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, பொட்டணம், மின்னாம்பள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட, 32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 10.91 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணைப்பதிவாளர் சண்முகநதி உட்பட பலர் பங்கேற்றனர்.