/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
/
நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
ADDED : அக் 09, 2024 06:22 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, அந்த தொட்டி சேதமடைந்ததால், புதிய தொட்டி கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நபார்டு வங்கி உதவியுடன், 38 லட்சம் ரூபாய் மதிப்பில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள நீர் தொட்டியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் தான் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். வேறு இடத்தில் கட்டக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், தற்போது பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, புதிய தொட்டி அமைக்க சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் அளவீடு செய்து பணியை அதிகாரிகள் தொடங்கினர். அப்போது, தாசில்தாரிடம் ஒரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்கனவே கோவில் பிரச்னை உள்ளது. தற்போது நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் அளவீடு பணியின் போது அசம்பாவிதத்தை தவிர்க்க, ராசிபுரம், டி.எஸ்.பி., தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

