/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 24, 2024 01:24 AM
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
ராசிபுரம், அக். 24-
ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாக்காலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட விசேஷ காலங்களில், ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நகரின் புறவழியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் ராசிபுரம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அணைப்பாளையம் கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு, 7 ஏக்கர் இடமும் தனி நபர் ஒருவர் தானமாக வழங்கினார். இதனால், அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பொதுமக்கள் புதிய பஸ் ஸ்டாணட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று சேர்மன் கவிதா தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் கோமதி, ஆனந்தன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி கமிஷனர் கணேஷ் முன்னிலையில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி உதவி பொறியாளர் ரவி, நகராட்சி மேலாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், 2 அ.தி.மு.க., கவுன்சிலர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என, 3 பேர் மட்டும் தீர்மானத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

