/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு
/
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு
ADDED : ஏப் 15, 2024 03:18 AM
ராசிபுரம்: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, வரும், 19ல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் தொடர்பாக நடக்கும் விதிமுறை மீறல்களை புகாராக தெரிவிக்க, 'சிவிஜில்' என்ற போன் அப்ளிகேஷனும், 'டோல் பிரீ' எண்ணும் வெளியிடப்பட்டது.
இதில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், நேற்று வரை, 47 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 'சிவிஜில்' ஆப் மூலம் பெறப்பட்ட, 36 புகார்களும் விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளன. அதேபோல், டோல் பிரீ மூலம் பதிவு செய்யப்பட்ட, 11 புகார் மீது நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பதிவான, 47 புகார்களுக்கும் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குமாரபாளையத்தில், 15, நாமக்கல்லில், 41, பரமத்தி வேலுார், 27, சேந்தமங்கலம், 21, திருச்செங்கோடு, 13, என பதிவான புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.