/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
/
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
ADDED : மார் 17, 2024 02:47 PM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம், நகராட்சி தலைவர் கலாநிதி தலைமையில், நேற்று நடந்தது. கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் பங்கேற்றார்.
தொடர்ந்து, சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வரும் நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சுற்று பகுதியில் உள்ள கிராம பஞ்.,களான வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி மற்றும் காதப்பள்ளி உள்ளிட்ட, 12 பஞ்.,களை ஒன்றிணைத்து தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, எம்.பி., ராஜேஸ்குமார், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், எம்.பி., சின்ராஜ் ஆகியோருக்கு நகராட்சி சார்பில் நன்றி உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, நகராட்சி கவுன்சிலர்கள், எம்.பி., ராஜேஸ்குமாருக்கு, வெள்ளி வாள் பரிசாக வழங்கினர்.

