/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளக்ஸ் பேனர் வைக்க சேந்தையில் கட்டுப்பாடு
/
பிளக்ஸ் பேனர் வைக்க சேந்தையில் கட்டுப்பாடு
ADDED : ஜூன் 12, 2025 01:51 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள நெடுஞ்சாலையோரங்களில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், திருவிழாவின் போது பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இதுபோல் வைக்கும் பேனர்களில், ஒரு சமுதாயத்தை சார்ந்து வாசகங்கள் உள்ளதாகவும், வேறுபட்ட கருத்துகள் உள்ளதாகவும் புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பாக, சேந்தமங்கலம் பகுதியில் அடிக்கடி மோதல் சம்பவம் நடக்கிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரம் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் தடை விதித்துள்ளனர். பேனர் வைக்க விரும்பினால், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், 'சில மாதங்களாக சேந்தமங்கலம் பகுதியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களால், அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், முறையான அனுமதி பெற்றால் மட்டுமே பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிக்கப்படும். மீறினால், போலீசார் மூலம் உடனடியாக அகற்றப்படும்' என்றார்.