/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 01:10 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் அன்
பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகாந்த், இணை செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், மத்திய செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை பொது கலந்தாய்வு நடத்தி, அதன் மூலம் மட்டுமே பணி மாறுதல் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், இந்த கோரிக்கையை ஏற்று அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பொது கலந்தாய்வு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.