/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
ADDED : செப் 04, 2025 01:57 AM
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்லில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கூடிய வருவாய்த்துறையினர், மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மை துறையில், மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட, 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனால் உதவி கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக வருவாய்த்துறை தொடர்பான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் போராட்டம் நடக்கிறது.