/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.பாளையம் ஆற்றங்கரையோரம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
/
ப.பாளையம் ஆற்றங்கரையோரம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
ப.பாளையம் ஆற்றங்கரையோரம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
ப.பாளையம் ஆற்றங்கரையோரம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 23, 2025 01:27 AM
பள்ளிப்பாளையம், தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றின் இருகரையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது. பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றங்கரையில் ஜனதா நகர், பாவடிதெரு, சந்தைபேட்டை, நாட்டாகவுண்டன்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
தொடர் மழையால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்தனர்.